தேவையான பொருட்கள்
- கேரட்
- மைதா
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- சமையல் சோடா
- நெய்
செய்முறை
ஒரு கப் பொடியாக நறுக்கிய கேரட், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கேரட் சாறு மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், ஒரு கப் மைதா, 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, 1/4 ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
