தேவையான பொருட்கள்
- கம்பு
- சின்ன வெங்காயம்
- உளுந்து பருப்பு
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
செய்முறை
தோல் நீக்கிய கம்பு ஒரு கப், 1/4 கப் உளுந்து பருப்பு சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்து, 1/2 கப் சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், ஐந்து காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
பின், இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு நான்கு மணி நேரம் வைக்கவும்.
இறுதியாக, தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
