தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- கேரட்
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- சமையல் சோடா
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் துருவிய கேரட், 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு சமையல் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
