தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா பொடி
- சோள மாவு
- எலுமிச்சை சாறு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
உருளைக்கிழங்கை சிறிய மெல்லிசான துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில், நான்கு ஸ்பூன் சோள மாவு, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து விடவும்.
தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் தடவி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
