தேவையான பொருட்கள்
- ரவை
- கேரட்
- சர்க்கரை
- நெய்
- எண்ணெய்
- முந்திரி
- ஏலக்காய் பொடி
- கேசரி பவுடர்
செய்முறை
முதலில், ஒரு கப் கேரட்டுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும்.
ஒரு கப் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், வடிகட்டி வைத்துள்ள கேரட் சாறு, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து, 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், வறுத்து வைத்துள்ள ரவை, ஒரு கப் சர்க்கரை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கலந்து விடவும்.
பின், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இறுகும் வரை கலந்து விடவும்.
இறுதியாக, 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, மற்றும் தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.
