புளிப்பு கீரை சட்னி

தேவையான பொருட்கள்

  • புளிப்பு கீரை
  • தேங்காய்
  • சின்ன வெங்காயம்
  • கடலைப்பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • சீரகம்
  • நல்லெண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கைப்பிடி கடலைப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 கப் சின்ன வெங்காயம், ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு கப் கீரை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு, தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

ஆறிய பின், அரைக்கவும்.

Previous Post Next Post