தேவையான பொருட்கள்
- புளிப்பு கீரை
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- சீரகம்
- கடலைப்பருப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- உப்பு
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன், இரண்டு கப் கீரை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு கீரையை மசித்து கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், 50 கிராம் சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், மசித்து வைத்துள்ள கீரை சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.
