தேவையான பொருட்கள்
- தினை அரிசி
- சர்க்கரை
- நெய்
- முந்திரி
செய்முறை
ஒரு கப் தோல் நீக்கிய திணை அரிசியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடான உடன், அரைத்து வைத்துள்ள திணையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.
பின், திணை அரிசி இறுகி வரும் வரை அடுப்பை மெதுவாக வைத்து கலந்து விடவும்.
பின்னர், 1/2 கப் சர்க்கரை சேர்த்து இறுகும் வரை கலந்து விடவும்.
இறுதியாக, 50 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.
