தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை
- சீரக சம்பா அரிசி
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- பிரியாணி மசாலா பொடி
- சிக்கன் மசாலா பொடி
- கறி மசாலா தூள்
- தயிர்
- எலுமிச்சை சாறு
- எண்ணெய்
- நெய்
- பட்டை
- லவங்கம்
- ஏலக்காய்
- பிரியாணி இலை
- சோம்பு
- புதினா இலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
குக்கரில், 50 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஏலக்காய், பட்டை, லவங்கம், பிரியாணி இலை, நான்கு பச்சை மிளகாய், இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன், 1/2 கப் தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.
பின், நான்கு தக்காளி மற்றும் ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.
பின்னர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
இதனுடன், இரண்டு கப் அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும். மேலும், நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
இறுதியாக, 25 மில்லி நெய் சேர்த்து கலந்து விடவும்.
