தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்

  • தக்காளி
  • புளி
  • மிளகாய் தூள்
  • வெந்தய பொடி
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

300 கிராம் தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, அரைத்து வைத்துள்ள தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 1/4 டம்ளர் புளி கரைசல் சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் வெந்தய பொடி, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வதக்கவும்.

Previous Post Next Post