தேவையான பொருட்கள்
- கடலை மாவு
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 கப் கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
