காளான் பக்கோடா

தேவையான பொருட்கள்

  • காளான்
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • மைதா
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • சோம்பு
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

பாத்திரத்தில், 1/4 கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, 1/4 கப் மைதா, ஒரு கப் பொடியாக நறுக்கிய காளான், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post