அவல் கார கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்

  • அவல்
  • பச்சரிசி மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • கடலைப்பருப்பு
  • சீரகம்
  • கடுகு
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

பின், 1/2 கப் அவலை ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அவலுடன், 1/2 கப் அரிசி
மாவு, வதக்கி வைத்துள்ள வெங்காயம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

பின், கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

Previous Post Next Post