வேர்க்கடலை எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள்

  • வேர்க்கடலை
  • அரிசி
  • எலுமிச்சை
  • பூண்டு
  • காய்ந்த மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • கடுகு
  • நல்லெண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை

செய்முறை

குக்கரில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து கடுகு பொரிந்தவுடன், ஆறு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 10 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின், தோலை நீக்கிய 1/2 கப் வேர்க்கடலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன், ஒரு எலுமிச்சையின் சாறு சேர்த்து நன்கு கொதித்த உடன், இரண்டு டம்ளர் சீரக சம்பா அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து சேர்க்கவும்.

மேலும், நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விடவும்.

Previous Post Next Post