தேவையான பொருட்கள்
- தோசை மாவு
- ரவை
- பெரிய வெங்காயம்
- தயிர்
- கேரட்
- இட்லி பொடி
- நல்லெண்ணெய்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் ரவை, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின், அதனுடன் 1/4 கப் தயிர், 1/2 கப் தோசை மாவு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர், தோசை கல்லில் ஊற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, இட்லி பொடி அதன் மேலே தூவி விட்டு தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
