மைதா-ரவை ஸ்வீட் தோசை

தேவையான பொருட்கள்

  • மைதா
  • ரவை
  • நாட்டுச் சர்க்கரை
  • வாழைப்பழம்
  • கேரட்
  • முந்திரி
  • நெய்

செய்முறை

ஒரு கப் ரவை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆறிய பின், அதனுடன் 1/4 கப் மைதா, 1/2 கப் துருவிய கேரட், 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, ஒரு வாழைப்பழம் மசித்து சேர்த்து நன்கு கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின்னர், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய், பொடியாக்கிய முந்திரி அதன் மேலே தூவி விட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post