முட்டை ஃப்ரை


தேவையான பொருட்கள்

  • முட்டை
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • சோள மாவு
  • மிளகாய் தூள்
  • சிக்கன் மசாலா தூள்
  • தனியா தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • கறி மசாலா தூள்
  • மஞ்சள் தூள்
  • மிளகுத்தூள்
  • எலுமிச்சை சாறு
  • எண்ணெய்
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஐந்து முட்டையை வேக வைத்து தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின், அதனை நான்கு புறமும் மசாலா உள்ளே இறங்கும் படி வெட்டிக் கொள்ளவும்.

பாத்திரத்தில், இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின், இந்த மசாலாவுடன் முட்டையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இறுதியாக, எண்ணெயில் போட்டு ஃப்ரை செய்யவும்.


Previous Post Next Post