தேவையான பொருட்கள்
- மாம்பழம்
- தக்காளி
- சீரகம்
- மிளகு
- பூண்டு
- சின்ன வெங்காயம்
- பெருங்காயத்தூள்
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- கடுகு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
தோல் நீக்கிய 1/2 கப் மாம்பழத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், கரைத்து வைத்துள்ள மாம்பழம், தேவைப்பட்டால் மேலும் தண்ணீர், ( நான்கு பல் பூண்டு, இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் ) தட்டி சேர்க்கவும். மேலும், இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
கொதிக்க தொடங்கியவுடன், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
