ஈரல் வறுவல்


தேவையான பொருட்கள்

  • ஈரல்
  • தக்காளி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகுத்தூள்
  • மிளகாய் தூள்
  • மட்டன் மசாலா பொடி
  • மஞ்சள் தூள்
  • கடுகு
  • சோம்பு
  • நல்லெண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சோம்பு, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கப் பொடியாக நறுக்கிய ஈரல் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின்னர், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post