தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- தக்காளி
- புளி
- காய்ந்த மிளகாய்
- சீரகம்
- மிளகு
- பூண்டு
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கைப்பிடி துவரம் பருப்பு, இரண்டு தக்காளி, சிறிதளவு புளி, இரண்டு காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின், அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, தட்டிய இஞ்சி பூண்டு சீரகம், சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து நன்கு வதக்கவும்.
பின்னர், அரைத்து வைத்துள்ள கலவை, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
