தேவையான பொருட்கள்
- ஆப்பிள்
- ரவை
- சர்க்கரை
- கேசரி பவுடர்
- முந்திரி
- நெய்
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
பின், கடாயில், ஒரு கப் துருவிய ஆப்பிள், 1/4 கப் ரவை, 1/4 ஸ்பூன் கேசரி பவுடர், நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும்.
அதனுடன், காய்ச்சி வைத்துள்ள பாகு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இறுகிய பதத்தில் எடுத்து ஒரு தட்டில் ஊற்றி அதன் மேலே பொடியாக்கிய முந்திரி தூவி விட்டு, ஆற வைத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
