பப்பாளி பாயாசம்

தேவையான பொருட்கள் 

  • பப்பாளி 
  • பால் 
  • சர்க்கரை 
  • ஏலக்காய் 
  • முந்திரி 
  • உலர் திராட்சை 
  • நெய் 


செய்முறை 

அடி கனமான பாத்திரத்தில், நன்கு பழுத்திறாத ஒரு கப் பப்பாளி துருவல், நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும். 

அதனுடன், ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 

பின், 1/2 கப் காய்ச்சிய பால், 25 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை, மூன்று ஏலக்காய் தட்டிச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Previous Post Next Post