பலாக்கொட்டை பொரியல்

தேவையான பொருட்கள் 

  • பலாக்கொட்டை 
  • பெரிய வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • மிளகாய் தூள் 
  • சாம்பார் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • தேங்காய்
  • கடலைப்பருப்பு 
  • காய்ந்த மிளகாய்
  • கடுகு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • உப்பு 


செய்முறை 

400 கிராம் பலாக்கொட்டையை தோலை நீக்கிவிட்டு இரண்டாக வெட்டி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு, இதனுடன் வேக வைத்துள்ள பலாக்கொட்டையை சேர்த்து, மேலும், 1/4 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கலந்து விடவும். 

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post