தேவையான பொருட்கள்
- ரவை
- உளுந்து பருப்பு
- தயிர்
- இஞ்சி
- பூந்தி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- உப்பு
- கொத்தமல்லி இலை
- கறிவேப்பிலை
- எண்ணெய்
செய்முறை
50 கிராம் உளுந்து பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
அதனுடன், 200 கிராம் ரவை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உளுந்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தயிர் எடுத்து அதனுடன் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகள், சிறிதளவு துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, சிறிதளவு பூந்தி சேர்த்து கலந்து விடவும்.
