பலாக்கொட்டை வறுவல்

தேவையான பொருட்கள் 

  • பலாக்கொட்டை 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • கறி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • சோம்பு
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 


செய்முறை 

300 கிராம் பலாக்கொட்டையை தோலை நீக்கிவிட்டு இரண்டாக வெட்டி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பின், வேக வைத்துள்ள பலாக்கொட்டையை தண்ணீரை வடித்து விட்டு இதனுடன் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கலந்து விடவும். 

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post