சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு


தேவையான பொருட்கள் 

  • கத்திரிக்காய் 
  • சின்ன வெங்காயம் 
  • தக்காளி 
  • காய்ந்த மிளகாய் 
  • கடலைப்பருப்பு 
  • உளுந்து பருப்பு 
  • வெந்தயம் 
  • சீரகம் 
  • தனியா 
  • மிளகு 
  • மஞ்சள் தூள் 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், கடாயில், பத்து காய்ந்த மிளகாய், இரண்டு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். 

பின், கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய், 1/4 கப் சின்ன வெங்காயம், 1/2 கப் கத்திரிக்காய், இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் வதக்கவும். 

வதங்கிய பின், அதை மசித்து விட்டு, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து விடவும். இதனுடன், ஒரு டம்ளர் புளிக்கரைசல், 1/2 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். பின், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். 

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
Previous Post Next Post