நாகர்கோவில் வெறும் குழம்பு


தேவையான பொருட்கள் 

  • தேங்காய் 
  • சின்ன வெங்காயம் 
  • பூண்டு 
  • சீரகம் 
  • வெந்தயம்
  • காய்ந்த மிளகாய்
  • புளி
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு 
  • தேங்காய் எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

ஒரு கப் துருவிய தேங்காய், ஐந்து சின்ன வெங்காயம், நான்கு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், 1/4 கப் நறுக்கிய சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து ஐந்து நிமிடம் அடி பிடிக்காமல் கலந்து விடவும். 

பின், ஒரு டம்ளர் தண்ணீர், 1/4 டம்ளர் புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைக்கவும். 

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
Previous Post Next Post