திருநெல்வேலி அல்வா


தேவையான பொருட்கள் 

  • உடைத்த கோதுமை 
  • சர்க்கரை 
  • முந்திரி 
  • நெய் 

செய்முறை 

முதலில், ஒரு கப் உடைத்த கோதுமை, மூன்று கப் தண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். 

ஊறிய பின், கோதுமையை நன்கு பிசையவும், அப்போது கோதுமை பால் கிடைக்கும், அதை நன்கு வடிகட்டி எடுத்து ஆறு மணி நேரம் வைக்கவும். 

ஆறு மணி நேரம் கழித்து பால் நன்கு தெளிந்து விடும் அதன் மேலே உள்ள தண்ணீரை மட்டும் வடித்து நீக்கிவிடவும். 

அடி கனமான பாத்திரத்தில், தயார் செய்து வைத்துள்ள பால், இரண்டு கப் தண்ணீர் (பால் எடுத்த அதே கப்) சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொஞ்சம் இறுகும் வரை நன்கு கைவிடாமல் கிளறவும்.

பின், தேவையான அளவு சர்க்கரை, இடையிடையே நெய் சேர்த்து கிளறவும். 

அல்வா பதத்திற்கு வந்த பின், 25 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
Previous Post Next Post