சென்னை வடகறி


தேவையான பொருட்கள் 

  • கடலைப்பருப்பு 
  • சோம்பு 
  • காய்ந்த மிளகாய் 
  • பச்சை மிளகாய் 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • மஞ்சள் தூள் 
  • மிளகாய் தூள்
  • தனியா தூள்
  • கறி மசாலா தூள் 
  • எண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

ஒரு கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும். 

அதனுடன், இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு, சிறிதளவு உப்பு சேர்த்து உதிரி பதத்திற்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நீளமாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

நன்கு வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் தனியா தூள் சேர்த்து வதக்கவும். 

பின், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 

தயார் செய்து வைத்துள்ள பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும். 

இறுதியாக, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post