திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி

 


தேவையான பொருட்கள் 

  • மட்டன் 
  • சீரக சம்பா அரிசி 
  • சின்ன வெங்காயம் 
  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • காய்ந்த மிளகாய் 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • பட்டை 
  • சோம்பு 
  • இலவங்கம் 
  • சீரகம் 
  • ஏலக்காய் 
  • பிரியாணி இலை 
  • கல் பாசி 
  • மிளகு
  • மிளகாய் தூள் 
  • தயிர் 
  • எலுமிச்சை சாறு
  • கொத்தமல்லி இலை 
  • புதினா 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • நெய் 


செய்முறை 

முதலில், இரண்டு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் சீரகம், நான்கு பட்டை, நான்கு இலவங்கம், சிறிதளவு கல் பாசி, நான்கு ஏலக்காய், நான்கு காய்ந்த மிளகாய், இரண்டு ஸ்பூன் மிளகு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பின், 1/4 கப் சின்ன வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய், இரண்டு தக்காளி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். 

குக்கரில், 300 கிராம் மட்டன், 300 மில்லி தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். 

பின்னர், அடி கனமான பாத்திரத்தில், 50 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள வெங்காயம்-பச்சை மிளகாய்-தக்காளி விழுது, இஞ்சி-பூண்டு விழுது, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து நன்கு வதக்கவும். 

வதங்கிய பின், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும். அதனுடன், அரைத்து வைத்துள்ள பொடியில் பாதி அளவு, வேக வைத்துள்ள மட்டன் (தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும்), ஐந்து ஸ்பூன் தயிர், நான்கு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும். 

பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த 3 டம்பளர் சீரக சம்பா அரிசி, ஐந்து டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். 

கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். 

வேக வைத்த பின், 10 நிமிடம் தம் போட்டு வைக்கவும். 

இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post