தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி
- பச்சரிசி
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- முந்திரி
- மிளகு
- சீரகம்
- பெருங்காயத்தூள்
- சுக்குப்பொடி
- நெய்
- உப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
ஒரு கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி, 1/3 கப் உளுந்து பருப்பு, நான்கு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவு பதத்திலிருந்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு 5 மணி நேரம் வைக்கவும்.
பின், கடாயில், நான்கு ஸ்பூன் நெய், இரண்டு ஸ்பூன் உடைத்த மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், 1/4 ஸ்பூன் சுக்குப்பொடி, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும் . மேலும், 25 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும்.
பின், ஒரு சின்ன கப்-ல் வாழை இலை வைத்து, அதில் பாதி அளவுக்கு தயார் செய்து வைத்துள்ள மாவு ஊற்றி, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தயார் செய்து வைத்துள்ள கப்பை அதனுள் வைத்து வேக வைக்கவும். தண்ணீருள் மூழ்காமல் வைக்கவும்.
