பள்ளிபாளையம் சிக்கன்

தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • சின்ன வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • இஞ்சி 
  • பூண்டு 
  • மஞ்சள் தூள் 
  • தேங்காய்
  • கடுகு 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம், விதை நீக்கிய 10 காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், இரண்டு ஸ்பூன் தட்டிய இஞ்சி, இரண்டு ஸ்பூன் தட்டிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். 

இதனுடன், 300 கிராம் சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும். 

பின், 1/4 கப் பொடியாக நறுக்கிய தேங்காய், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.

இறுதியாக, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post