தேவையான பொருட்கள்
- மைதா
- டூட்டி-ஃப்ரூட்டி
- சர்க்கரை
- தேங்காய்
- ஏலக்காய் பொடி
- சமையல் சோடா
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் மைதா, 1/4 கப் சர்க்கரை, 25 கிராம் டூட்டி-ஃப்ரூட்டி, 1/4 கப் துருவிய தேங்காய், 1/4 ஸ்பூன் சமையல் சோடா, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து 30 நிமிடம் வைக்கவும்.
பின், சிறிய சிறிய உருண்டைகளாக வரும் படி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
