ஃப்ரைடு மீன் சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள்  

  • மீன்
  • சப்பாத்தி  
  • மீன் மசாலா தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • மிளகுத்தூள்
  • எலுமிச்சை சாறு
  • எண்ணெய் 
  • உப்பு  
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், 200 கிராம் முள் நீக்கி பொடியாக நறுக்கிய மீன், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மீன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, அடுப்பை மெதுவாக வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும். பின், சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 

பின், சப்பாத்தியில் தயார் செய்து வைத்துள்ள மீன் ஃப்ரை வைத்து ரோல் செய்யவும்.
Previous Post Next Post