பாசிப்பருப்பு தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்

  • சீரக சம்பா அரிசி
  • பாசி பருப்பு
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • சீரகம்
  • கடுகு
  • உப்பு
  • வெந்தயம்
  • இஞ்சி
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • மஞ்சள் தூள்


செய்முறை

ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், சேர்த்து இவை பொரிந்த உடன் பத்து சின்ன வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், நான்கு காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர், நான்கு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பின்னர், இரண்டு டம்ளர் அரிசியுடன் ஒரு டம்ளர் பாசி பருப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும். இதனுடன் ஐந்து டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். 

இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இரண்டு விசில் வரை சமைக்கவும்.

Previous Post Next Post