தினை பாயாசம்

தேவையான பொருட்கள் 

  • தினை அரிசி 
  • ஜவ்வரிசி 
  • சர்க்கரை 
  • பால்
  • நெய் 
  • முந்திரி 
  • உலர் திராட்சை 
  • ஏலக்காய் பொடி 

செய்முறை 

கடாயில், 1/2 கப் தோல் நீக்கிய தினை அரிசி, 1/2 ஸ்பூன் நெய் சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும். 

பாத்திரத்தில், மூன்று கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன், வறுத்து வைத்துள்ள தினை அரிசி, 1/4 கப் ஜவ்வரிசி சேர்த்து வேக வைக்கவும். 

பாதி அளவு வெந்தவுடன், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு வெந்தவுடன், 20 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/2 கப் காய்ச்சிய பால் (அல்லது தேவைக்கேற்ப ஒரு கப் பால்) சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
Previous Post Next Post