தேவையான பொருட்கள்
- தினை
- பாசிப்பருப்பு
- வெல்லம்
- நெய்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
செய்முறை
பாத்திரத்தில், 1/2 கப் பாசிப்பருப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
பின், 30 நிமிடம் ஊற வைத்த தோல் நீக்கிய ஒரு கப் தினை அரிசி, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து இறுகி வரும் வரை வேக வைக்கவும்.
பின்னர், 1/2 கப் பொடியாக்கிய வெல்லம், ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து வெல்லம் கரைந்து இறுகி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, நெய்யில் வறுத்த 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, தட்டிய இரண்டு ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும்.
