தேவையான பொருட்கள்
- மைதா
- தயிர்
- கோவா
- வெண்ணெய்
- சமையல் சோடா
- சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- நட்ஸ்
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு கப் சர்க்கரை, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 15 நிமிடம் கொதிக்க வைத்து 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.
பின், 200 கிராம் மைதா, 1/2 ஸ்பூன் சமையல் சோடா, 50 கிராம் இனிப்பில்லாத கோவா, இரண்டு ஸ்பூன் வெண்ணெய், 1/2 கப் கெட்டியான தயிர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி, நடுவில் சிறிய குழி செய்து பொடியாக்கிய நட்ஸ் அதனுள் வைத்து மூடி நட்ஸ் வெளியே வராதவாறு நன்கு தட்டவும்.
பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
இறுதியாக, தயார் செய்து வைத்துள்ள பாகில் போட்டு ஆறு மணி நேரம் வைக்கவும்.
