தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- புளி
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- பூண்டு
- சீரகம்
- மிளகு
- பெருங்காயத்தூள்
- வெந்தயம்
- கடுகு
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
முதலில், 100 கிராம் பொடியாக நறுக்கிய பீட்ரூட், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து பீட்ரூட் சாறு மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
நான்கு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு நன்கு தட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/4 ஸ்பூன் வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு சின்ன வெங்காயம், தட்டி வைத்துள்ள மிளகு சீரகம் பூண்டு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர், தயார் செய்து வைத்துள்ள பீட்ரூட் சாறு, 1/4 டம்ளர் புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
