தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து
- கடலை மாவு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- இஞ்சி
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கருப்பு உளுந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், சிறிதளவு இஞ்சி, ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பின், 1/4 கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/4 கப் கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு போண்டாவாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
