தேவையான பொருட்கள்
- முட்டை
- சாதம்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- மஞ்சள் தூள்
- மிளகுத்தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், நான்கு முட்டையை வேக வைத்து, வெள்ளை முட்டையை மட்டும் துருவி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், மூன்று பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள முட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
