தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- இஞ்சி
- அரிசி மாவு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கருப்பு உளுந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், சிறிதளவு இஞ்சி, ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பின், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, நான்கு ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு வடையாக தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
