ஸ்வீட் கார்ன் மசால் வடை


தேவையான பொருட்கள் 

  • ஸ்வீட் கார்ன் 
  • கடலைப்பருப்பு 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • காய்ந்த மிளகாய்
  • கடலை மாவு
  • சோம்பு 
  • இஞ்சி 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • எண்ணெய் 

செய்முறை 

முதலில், ஒரு கப் கடலைப்பருப்பை‌ இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பின், அரைத்து வைத்துள்ள பருப்புடன், 1/4 கப் வேக வைத்த ஸ்வீட் கார்ன், ஐந்து ஸ்பூன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

பின்னர், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
Previous Post Next Post