மிளகு உப்புமா


தேவையான பொருட்கள் 

  • வெள்ளை ரவை 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • காய்ந்த மிளகாய் 
  • மிளகு 
  • முந்திரி 
  • பாசிப்பருப்பு
  • கடுகு 
  • உப்பு 
  • நெய்
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், ஒரு கப் ரவை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.‌ 

கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, தட்டிய மிளகு நான்கு ஸ்பூன், பத்து முந்திரி சேர்த்து வதக்கவும். 

பின், மூன்று கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலந்து விடவும். 

ரவை வெந்தவுடன், சிறிதளவு கொத்தமல்லி இலை, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அடுப்பை நிறுத்தி பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
Previous Post Next Post