லெமன் அவல் உப்புமா


தேவையான பொருட்கள் 

  • அவல்
  • எலுமிச்சை சாறு 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • இஞ்சி 
  • பூண்டு 
  • காய்ந்த மிளகாய் 
  • மஞ்சள் தூள்
  • கடுகு 
  • எண்ணெய் 
  • உப்பு
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

முதலில், 200 கிராம் அவல் தண்ணீரில் நனைத்து, தண்ணீரை வடிகட்டி விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். 

கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்‌ சேர்த்து வதக்கவும். 

பின், நான்கு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தயார் செய்து வைத்துள்ள அவல், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கலந்து விடவும்.

Previous Post Next Post