தேவையான பொருட்கள்
- சாதம்
- கேரட்
- மைதா
- மிளகாய் தூள்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், 1/2 கப் சாதம், 1/2 கப் துருவிய கேரட், 1/4 கப் மைதா, ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய சிறிதளவு கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
