மசாலா உப்புமா


தேவையான பொருட்கள் 

  • ரவை 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • கேரட் 
  • பீன்ஸ் 
  • பச்சை மிளகாய் 
  • கறி மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • சிக்கன் மசாலா தூள் 
  • மஞ்சள் தூள்
  • இஞ்சி 
  • பூண்டு
  • கடுகு 
  • கடலைப்பருப்பு
  • முந்திரி
  • உப்பு 
  • எண்ணெய் 
  • நெய்
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

முதலில், ஒரு கப் ரவை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் , ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, 1/2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பின், கேரட் பீன்ஸ் இரண்டும் சேர்த்து 1/2 கப், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

காய்கறிகள் வெந்தவுடன், மூன்று கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். 

இறுகியவுடன், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, இரண்டு ஸ்பூன் நெய், பத்து முந்திரி சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
Previous Post Next Post