தேவையான பொருட்கள்
- காலிஃப்ளவர்
- கடலைப்பருப்பு
- தேங்காய்
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 1/2 கப் துருவிய தேங்காய், 1/2 ஸ்பூன் சோம்பு, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் சோம்பு, பத்து சின்ன வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின், 1/2 கப் காலிஃப்ளவர், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், 1/2 கப் கடலைப்பருப்பு, ஒரு கப் தண்ணீர் (தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்), அரைத்து வைத்துள்ள தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
