தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- மிளகு
- சீரகம்
- கடுகு
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 100 கிராம் துவரம் பருப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் எண்ணெய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒன்று-இரண்டாக உடைத்த இரண்டு ஸ்பூன் மிளகு மற்றும் 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், வேக வைத்துள்ள பருப்பை மசித்து சேர்க்கவும்.
பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
