சப்பாத்தி வறுவல்


தேவையான பொருட்கள் 

  • சப்பாத்தி 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • கறி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா தூள் 
  • மட்டன் மசாலா தூள் 
  • மஞ்சள் தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • சோம்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து வதக்கவும். 

பின், சிறிய துண்டுகளாக நறுக்கிய நான்கு சப்பாத்தி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கலந்து விடவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
Previous Post Next Post